கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 12 September 2015


மறக்க முடியாத பள்ளிகால வாழ்கை:-
1. முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் முன் அழுதது
2. வாத்தியாருக்கு வேணும்னே சீக்கி்ரம் உடைஞ்சு போற மாதிரி குச்சி தர்றது
3. வீட்டு பாடம் எழுதாமல் மறுநாள் ஆசிரியர் கிட்ட அடிவாங்கினது
4. வாத்தியார் அடிக்கும் குச்சியை ஒழித்து வைத்தது
5. பள்ளிக்கு போக மாட்டேன் என்று சொன்னதுக்காக அப்பா அடித்தது
6. மாலையில் பள்ளி விட்டதும் சத்தம் போட்டுகொண்டு ஓடியது
7. வாரத்தின் முதல் நாள் (திங்கள் கிழமை ) அன்று அடுத்த சனி கிழமை, ஞாயிறு கிழமை எப்ப வரும் என்று காத்திருப்பது
8. காலண்டரில் இந்த மாதம் எத்தனை அரசு விடுமுறை வருது என மாதந்தோறும் பார்ப்பது
9. வருசம் புல்லா படிக்காம ஊர சுத்திட்டு, பரிட்ச்சைக்கு ஒரு நாள் முன்னாடி அவசர அவசரமா எத படிகரதுனே தெரியாம முழிச்சது
10. இருக்குரதுலயே அதிக பக்கங்கள் இருக்கிற புக்க வெச்சு 'புக் கிரிக்கெட் ' விளையாடுறது .
11. பிறந்தநாள் லீவு அன்னைக்கு வருதேன்னு வருத்த பட்டது.
12. வட்டம் போட காம்பஸ் இருந்தும் பக்கத்து பெஞ்சுல இருக்க பொண்ணுகிட்ட வளையல் வாங்குறது
13. பள்ளிக்கு செல்லும் முன் அப்பா காசு கொடுப்பாரா இல்லையா என எதிர் பார்த்தது
14.. சில்லறைக் காசு கையளவில் ...சந்தோஷமோ கடலளவில்
15. பரிச்சையில் முதன்முதலில் பிட் அடித்தது
16. முதன்முதலில் பள்ளியை கட் அடித்துவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றியது
17. முழுஆண்டு தேர்வின் கடைசி பரிச்சை அன்று சட்டையில் மை (இங்) அடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தியது

18. ப்ளாக் போர்டுக்கு கரி பூசும் நாளை திருவிழா போல கொண்டாடுவோம்
19. சட்டையை டக் இன் செய்து, அரைஞான் கயிற்றை பெல்ட்டா யூஸ் செய்வது
20. யாராவது பேசுனீங்க போர்ட்ல நேம் எழுதி வெச்சிருவேன் -மிக அதிகம்,மிக மிக அதிகம் ..
21. நண்பர்களிடம் சாப்பாட்டை பகிர்ந்து உண்பது
22. முதல் லவ் லெட்டர் எழுதியது

Monday 7 September 2015

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

உன்னால் அனாதையாக பட்ட ஒருவன் ....

Saturday 5 September 2015


விலகி போகிறேன்


விலகி இருக்கின்றேன் 
விருப்பத்தினால் அல்ல 
என்னால் நீ 
வேதனைப்பட 
வேண்டாம் என்பதற்காக .. 
நள்ளிரவு பொழுதுகளில்
தனை மறந்த என் விழிகள்
உன்னை தேடுகின்றது .
மறுபடி நீ வேண்டும்
என்பதற்காக அல்ல
மறந்தேனும் மறுமுறை அழைப்பாயா என்ற நம்பிக்கையில் .!!!



ஆனாலும் மறந்து கூட அழைத்து விடாதே..

என் காதல் 

என் காதல் உன்னை மட்டும்
காதலிக்க
கற்றுத்தரவில்லை
உன்னைத்தவிர யாரையும்
காதலிக்ககூடாது
என்பதையும் தான்
கற்றுத்தந்தது..

அனாதையாக பட்ட ஒருவன் .....

கொடிய வலி (காதல்)


நாம் மிகவும் நேசிக்கின்ற ஒரு உறவை
சேரவும் முடியாமல் யாருக்கும்
விட்டுக்கொடுக்கவும் முடியாமல்
தவிக்கின்ற நொடி தான்
          உலகத்தில் மிகவும் கொடியது...............

உன்னால் அனாதையாக பட்ட ஒருவன் .
அழகான ராட்சஷி...
கண்ணிர் மல்க கேட்கும் இந்த காதலனின் வேண்டுகோள்
திரும்ப மட்டும் வந்திடாதே.....

Thursday 3 September 2015

தனிமையை தந்த காதல் 



காதல் ஒரு மிருகம்
இம் மிருகத்திற்கு 
வெறி பிடித்தால் தன்னைத்தான் உணவாக்கி கொள்ளும்,

காதல் ஒரு போர் 
தொடங்குவது எளிது 
முடிப்பது அரிது,

கண்டவனுக்கு கடவுள்
காணதவனுக்கு கல்

காதல் ஒரு பருவ பச்சோந்தி

காதல் ஒரு பருவ கால பறவை

காதல் மகிழ்ச்சியான 
ஒன்று ஆனால் 
காதலிப்பவர்களை 
அது மகிழ்ச்சியாக 
இருக்க விடாது

இரு மனங்கள் 
கஷ்ட்ட பட்டு 
வாழ்வில் இஷ்ட்டமாய் 
வாழ்வதே காதல்.

காதல் புனிதமான ஒன்று 
உயிர் பலி கொடுத்து 
புனிதம் கலங்குவதும் உண்டு

நீ மிஞ்சி போனால் 
உன்னை கெஞ்சி போகும் 
நீ கெஞ்சி போனால் 
உன்னை மிஞ்ச வைக்கும்.

வாழ்க்கையின் குறுகிய 
முன்னேற்றம் கொண்ட திறவு கோள்,

காதல் விசித்திரமான காடு
இங்கே மான்கள்தான்
சிங்கங்களை வேட்டையாடுகின்றன.

காதல் விசித்திரமான குளம்
இங்கே மீன்கள்தான் 
மீனவர்களை வேட்டையாடுகின்றன,

காதல் விசித்திரமான பூங்கா
இங்கே மலர்கள்தான் 
வண்டுகளை சாகடிக்கின்றன,,,,

காதலை பற்றி 
நிறைய எழுதலாம் frns,,,,

காதலை பற்றி எழுதவும், பேசவும் முடியாமல் தோல்வியை 
ஒப்பு கொண்டவர்கள் பலர் 
அதில் நானும் 
ஒருவனாக இருந்து விடுகிறேன்.....

அதுவும் தனியாகவே இருந்து விடுகிறேன் ...!


அழகான ராட்சஷி......