கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Thursday 3 September 2015

தனிமையை தந்த காதல் 



காதல் ஒரு மிருகம்
இம் மிருகத்திற்கு 
வெறி பிடித்தால் தன்னைத்தான் உணவாக்கி கொள்ளும்,

காதல் ஒரு போர் 
தொடங்குவது எளிது 
முடிப்பது அரிது,

கண்டவனுக்கு கடவுள்
காணதவனுக்கு கல்

காதல் ஒரு பருவ பச்சோந்தி

காதல் ஒரு பருவ கால பறவை

காதல் மகிழ்ச்சியான 
ஒன்று ஆனால் 
காதலிப்பவர்களை 
அது மகிழ்ச்சியாக 
இருக்க விடாது

இரு மனங்கள் 
கஷ்ட்ட பட்டு 
வாழ்வில் இஷ்ட்டமாய் 
வாழ்வதே காதல்.

காதல் புனிதமான ஒன்று 
உயிர் பலி கொடுத்து 
புனிதம் கலங்குவதும் உண்டு

நீ மிஞ்சி போனால் 
உன்னை கெஞ்சி போகும் 
நீ கெஞ்சி போனால் 
உன்னை மிஞ்ச வைக்கும்.

வாழ்க்கையின் குறுகிய 
முன்னேற்றம் கொண்ட திறவு கோள்,

காதல் விசித்திரமான காடு
இங்கே மான்கள்தான்
சிங்கங்களை வேட்டையாடுகின்றன.

காதல் விசித்திரமான குளம்
இங்கே மீன்கள்தான் 
மீனவர்களை வேட்டையாடுகின்றன,

காதல் விசித்திரமான பூங்கா
இங்கே மலர்கள்தான் 
வண்டுகளை சாகடிக்கின்றன,,,,

காதலை பற்றி 
நிறைய எழுதலாம் frns,,,,

காதலை பற்றி எழுதவும், பேசவும் முடியாமல் தோல்வியை 
ஒப்பு கொண்டவர்கள் பலர் 
அதில் நானும் 
ஒருவனாக இருந்து விடுகிறேன்.....

அதுவும் தனியாகவே இருந்து விடுகிறேன் ...!


அழகான ராட்சஷி......

No comments:

Post a Comment