கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 29 August 2015


மறுக்கபட்ட  முத்தம் 



ஒரு முத்தம் கொடு....
                வட்டியோடு திருப்பி தருகிறேன் என்றேன்......
தரமாட்டேன் போ...
  அசலை வைத்துக்கொண்டு அடிக்கடி வட்டியைமட்டும் தருவாய் என்றாள்.....!

Wednesday 19 August 2015

என்னை பிரிந்தவள்....
காணாமல் கண்ணீர் வடிக்கும்
என் கண்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
கலைந்த கனவு என்று,
அள்ளிப் பருக முடியாமல்
ஆர்பரிக்கும்
என் இதழ்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
கானல் நீர் என்று,
அணைக்கத் துடிக்கும்
என் கரங்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
அழகான வானம் என்று,
நினைத்து வாடும்
என் உள்ளத்துக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
உயரே பறந்து சென்ற
பறவை என்று,
புரிய வைக்க
புதிய வழிகள்
தேடுகிறேன்
புதிய காதல் கல்லூரியில்....
அனாதையாய் கிடக்கிறது
எனது அலை பேசி
என்னை போலவே
அவளது அழைப்பு இல்லாமல்......!
மறைக்கப் பார்த்தாலும்
மறையாத
உணர்வுகள்
காதலும்...
காமமும்....
மை இல்லாத
பேனா எழுதும்
எழுத்துகளைப் போல்,
உனக்கு தெரியாமல் போனதடி..
என் கவிதைகள்...

உன்னுள் ஒருவனாக......

உன்னுள் ஒருவனாக ....



யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
... ஒருவனாகிப்
போவேன் நான்......


வலிகள் நிறைந்தத வாழ்க்கையோடு பயணம் செய்பவன் .....


கண்ணர்த்துளிகள்
உன் கண்ணீர்த்
துளியைத்
துடைத்துவிட்ட
என் கையில்
கவிதை
பிசு பிசுத்தது
உன்
கை பிடித்துக்
கொண்டு
வீட்டுக்குப்
போகவேண்டும்
என்று நினைத்துதான்
நடந்தேன்
தெரியாத்தனமாய்
சொர்க்கத்துக்குப்
போய்விட்டேன்
காதலிப்பதைவிட
காதலிக்கப்படுவதிலேயே
அதிக சுகம்
அந்த சுகத்தையே
உனக்குத் தர
விரும்புகிறேன்
எல்லோரும்
கைபேசியில்
பேசுவார்கள்
நீ மட்டும்
கண் பேசியில்
பேசுகிறாய் ...
குழந்தைகள்
அம்மா அப்பா
விளையாட்டு
விளையாடுவதைப்போல
நாம்
காதலன் காதலி
விளையாட்டு
விளையாடவேணும்
என் நெஞ்சில்
சாய்ந்துகொண்டே
`என்ன உங்கள்
இதயம் துடிப்பது
கேட்கவில்லையே ?`
என்கிறாய்
அது எப்படித்
துடிக்கும் உனக்கு
வலிக்குமே !
நான் தேவதையோடு
வாழப்பிறந்தவன்
அதனால்
உன்னை விட
எந்தப் பெண்ணோடும்
என்னால்
வாழ்ந்துவிட முடியாது
என் ஆசை
எல்லாம் ஒன்றுதான்
தனக்கு
இப்படி ஒரு
கணவன்
கிடைக்கவில்லையே
என்று
எல்லாப்பெண்களும்
பொறாமைப்படும்
அளவுக்கு ஒரு
நல்ல கணவனாய்
உனக்கு நான்
இருக்கவேண்டும்
எதிர்பாராத
தருணத்தில்
நடக்கிற விபத்து
காதல்...
இரண்டிலும்
முடிவு
மரணமாகக் கூட
இருக்கலாம்.....

உன்னுள் ஒருவனாக....
 என்னருகே ...

                                                                   






கடவுளைக்
கண்டுபிடித்தான்
மனிதன்
மனிதனைக்
கண்டுபிடித்தது
காதல்
கடவுளுக்கும்
காதலுக்கும்
ஒரேயொரு
வித்தியாசம்தான்
கடவுள்
இருக்கிறாரா
இல்லையா என்று
தெரியாது
காதல்
கண்முன்னே
இருக்கிறது
                                                          வார்த்தைகள்


சில வார்த்தைகள்
பேசப்படும்போது
அழகாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
... கவிதையாகும்போது
அழகாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன
உன்
காதலைப்போல்............

உன்னுள் ஒருவனாக.....

Sunday 16 August 2015


தேவதை

உன்
பெற்றோரை நான் பார்த்ததுண்டு
அவர்கள் மனிதர்கள்தான் ....!
ஆனால்
நீ மட்டும் எப்படி
தேவதையானாய்...!
காதலுக்கு கண் இல்லை
என்பது பொய்
உனது கண்களை
பார்த்தபிறகு தான்
உன்னை காதலிக்கவே
தொடங்கினேன்...
உன்னை
யார் மலர் கண்காட்சிக்கு
போக சொன்னது ?
இப்போது பார் எல்லா மலர்களும்
உன்னோடு வர
துடிக்கின்றன
என்னை பார்க்கும்
ஒருநொடியில்
என்னிடமிருந்து எல்லாமே
எடுத்து செல்கிறாய்
போகும் வழியில் விட்டு செல்கிறாய்
அனாதையாக
நீயின்றி நானும்
என் மனமும்
எங்கேனும் சிதறும் 
சிரிப்பின் சத்தங்களில் எல்லாம் 
மீண்டும் உன் ஞாபகங்கள் 
என் இதயத்தை நிரப்பி செல்வது 
வாடிக்கையாகிப்போனது எனக்கு .....................


அதிபன் அகல்யா ................


ஒவ்வொருமுறை பார்க்கும்போதும்




ஒவ்வொருமுறை
உன் கண்களை 
நேருக்குநேர்
சந்திக்கநேரும்போதும்
அடுத்த நொடியில் மரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போல…
உன்னை
இமைக்காமல் பார்க்கின்றன
என் கண்கள்…!!!

நீ இமைதிறக்கும் நேரம்
என் பகலாகவும்…
இமைமூடும் நேரம்
இரவாகவும் கொள்கிறேன் நான்…
ஆனாலும் உந்தன் சில
கண்சிமிட்டல்களில்..
என் பல வருடங்கள் கடந்து
காணாமல் போகின்றன

நிறக்குருடன் கண்களுக்கு
நீலவானம் எப்படியோ
அப்படியே எனக்கும்
நீ இல்லா நினைவுகள்...!

காதல் வந்துவிட்டால்
தன்னிலை
மறைக்குமாம் -ஆம்
என் உமிழ் நீரின்
குமிழியில் கூட
உன் பிம்பம்தான்

இன்று வரை பார்க்கிறேன்,
இன்னும் புரியவில்லை ,
இவள் இதயம் எனக்காக
என்ன சொல்கிறதென்று

காதல்..
நெரிஞ்சிபூப்போல..
பூவாய் இருக்கும்போதே பறித்துவிடு..
இல்லையெனில்..
முள்ளாய் மாறி..
நெஞ்சில் குத்திவிடும்.................

வலிகள் சேர்ந்த வாழ்க்கையோடு
பயணம் செய்கிறேன்
மன்னிப்பாய என்னவளே ...

உன்னால் வெறுக்கபட்டவன்
எனக்கு பொறாமை ......
ஜோடியாக
யாரை நான்
பார்த்தாலும் .....
ஏனோ ஒரு
தாழ்வுணர்ச்சி !
தடவிப்
பார்த்துக்கொள்கிறேன்
என் தாடியை .......
இருக்கிறேன் ....
இறக்கிறேன்
இறந்தும் இருக்கிறேன்
எதற்காக என்று தெரியாமல்
தவிக்கிறேன்
தடுமாறுகிறேன்
தாகத்தால் தவிக்கிறேன்
தீர்வுதான் தெரியவில்லை
அழுகிறேன் அலைகிறேன்
ஆற்றல் இழந்து நிற்கிறேன்
ஆறுதல் சொல்லத்தான் ஆளில்லை  

அனாதையாக ஒருவன் .......

காத்திருக்கிறேன் உனக்காக 

என்
பெருந்துன்பத்திலும்
ஓர் இன்பம் .
எனக்காக
நீ
நீ வரும் வரை ,
ஒரு தாய் பறவையைப் போல்
பாதுகாக்கிறேன்
உன் நினைவுகளை
நீ வரும் வரை
பாதுகாக்க சொல்லி
பரிசளித்து செல்கிறாய் ,
உனக்காக காத்திருக்கும்
அற்புத நிமிடங்களை
உன் அழைப்பு வராத
இவ்விரவினை ,
என் நினைவிலிருந்து நீக்க சொல்லி
கணத்துக்கொருமுறை போராடுகிறது
என் மனம்
எங்கே என நீ என்னைத் தேடும்போது ,
உனக்காவே
தொலைந்து போய்
என்னை
பொறுமையாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் ........................       அதிபன் அகல்யா
அழகான ராட்சஷி திருமணத்திற்கு பிறகு 



உன்னிடமிருக்கும்
ஆடைகளின்
நிறங்களும் வடிவங்களும்
எனக்கு
அத்துப்படி.
எந்த தினங்களில்
நீ
எந்த ஆடை அணிவாய் என்பதையும்
எந்த ஆடைக்கு
எந்த
காதணி அணிவாய் என்பதையும்,
எந்தக் காதணிக்கு
எந்தக்
காலணி அணிவாய் என்பதையும்,
துல்லியமாய்ச் சொல்லிய
காலங்கள்
உண்டு.
நீண்ட வருடங்களுக்குப்
பின்
ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன்
உனக்குத்
தொலை பேசுகையில்.(தொலை பேசியில் பேசுகையில்)
குழந்தை அழுகிறது
பிறகு பேசலாமா
என்ற
உன் குரலின் ஆடையையும்
புரிந்து கொள்ளாமல்
போய்விட முடியவில்லை
என்னால்...!!!!..........................................

என்றும் உன்னை மறவாதவனாய்.............

அம்மாவின் கடைசி மடல் 

அன்புள்ள மகனுக்கு குறையாத பாசத்துடன்
நடைபாதையிலிருந்து உன் அம்மா
எழுதுவது... !
நீயும் உனது குடும்பமும் நலமா ?
அன்று உனக்கு வாழ்கையை கத்துகொடுத்த
அதே அன்போடும் பாசத்தோடும் - இந்த
மடல் எழுதுகிறேன்..!

இக் கடிதத்தை உன் பிள்ளைகளுக்கு
தெரியாமல் படி..!
உன் மனைவியோ நீயோ நாளை
இப்படி எழுதாமலிருக்க..!
உனக்கு சாபம் விடுவதோ ...!
என் கஷ்டங்களை சொல்வதோ..!
உன்னிடம் உதவி கேப்பதோ..!
இக்கடிதத்தின் நோக்கமல்ல..!!!
உன்னை பெற்றெடுத்தவளின் கடைசி ஆசையை
காது கொடுத்து கேப்பாய்
என்ற நம்பிக்கையில் வரைகிறேன்
இந்த மடலை ...!
சுவர்கோழி கத்தும் போதும்..!
காகம் கரையும் போதும்...!
கதவுகள் ஆடும் போதும்...!
விக்கல் வரும் போதும்...!
என்னை நினைத்து சந்திக்க வருவாய் என
காத்து கொண்டிருக்கிறேன் .
ஒவ்வொரு நாலும்
சில பல நாட்களாக
உடல் நிலை மிக மோசம் அடைந்து விட்டது ...
நன் இறந்த பிறகு ..
உன் கையால் கொல்லி வைக்க வேண்டும்...!
தயவு செய்து என் தலையில்
வைக்காதே ...!
என் நெஞ்சில் வை...!
உன்னைப்பற்றிய நினைவுகள்
அங்குதான் அதிகமாய் இருக்கிறது...!
அதை சுமந்து சுமந்து நான் கூனாகி
கூட போகிவிட்டேன்...!
எதற்கும் பயன்படாத
அந்த நினைவுகள் சாம்பலாகி
உரமாகட்டும் வரும் தலைமுறைக்கு..!
பெற்றெடுத்தவலை தனியாய்
தவிக்க விட கூடாது என்று...!
உன்னைப்பற்றிய நினைவுகள் உள்ளுக்குள்
எரிமலையாய் பொங்குவதை ....!
கண்ணீர் துளிகள்பட்டு தீக்காயம்
படுவதை இப்போதுதான் பார்க்குறேன் ...!
கையேந்தி காத்து கிடக்கிறேன்
ஒரு வேலை உனக்காக ...!
இதற்க்கு பதில் கடிதம் எழுத நினைத்தல்
அந்த கடித்தை சோற்று பருக்கையால் ஒட்டு
அதாவது என் பசியை ஆற்றட்டும் ...!
அன்புடன் ...
என்றும் நீ நலம் வாழ
வேண்டும் உன் அன்பு தாய்


          அதிபன் அகல்யா .................

பிரிவு 


நேற்று வரை என் அருகில் நீயிருக்க
தெரியவில்லை என் மனதிற்கு
துயரம் என்னவென்று?
இன்றோ நிலம் தொடும் என் கண்ணீர் துளியை
தாங்கவும் உன் கரமில்லை...!
ஆறுதல் அளிக்கவும் உன் தோளில்லை...!
அதை நினைத்தே இன்னும் ஏங்கும்
என் மனதிற்கு எப்படி கூறுவேன்...?
இது தவிர்க்க முடியாத பணி என்று.!
உண்மையில் இன்று தான் உணர்ந்தேன்.
வாழ்வில் இரண்டு முறை என் இதயம்
இருப்பதை நான் உணர்ந்தேன் ...
ஒன்று முதல் முதலாய் உன்னை கண்ட போது...!
மற்றொன்று நீ என்னை விட்டு விலகிய பிறகு....!
தொலைந்துபோன தூக்கம்...!
மூடமறந்த இமைகள்...!
சுவையே இல்லாத உணவு...!
நிறங்கள் அற்ற மலர்கள்...!
யாருடனும் பேசப்பிடிக்காத தனிமை...!
இசையே இல்லாத பாடல்கள்...!
மலர்களே இல்லாத பூங்காக்கள்...!
வானவில் இல்லாத மழைநாள்...!
மழைமேகம் கடந்து போகையில்...
தோகை விரித்து ஆடாத வண்ணமயில்...!
புன்னகை மறந்த முகங்கள்...!
உன்னைப் பிரிந்த பொழுதுகளில்
என்னை தொடரும் காட்சிகள் இவையே.
நீ மெல்லத் திரும்பும் ஒரு பொழுதில்
இவை எல்லாம் மெல்ல உயிர்பெறும்....
வருவேன் என்றொரு வார்த்தை சொல்.....
த்தனை ஆனந்தமும் மொத்தமாய்....
திரும்பி என் நினைவில் புன்னகைக்கும்...!!!
கண்ணீர் வடிக்கும் என் விழிகளுக்கு என்ன ஆறுதல் கூறுவேன்?
சாய்ந்து அழ உன் நெஞ்சம் இல்லையென்று
அலைபாயும் என் கரங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்?
உன் முகம் எனகெட்டாத தூரத்தில் இன்று
இருந்தும் இறந்து வாழ்கிறேன் ......
அதிசய பிறவியாய் உன்னை பிரிந்தும் இவ்வுலகத்தில்
கண்ணீர் துளிகளுடன் உன்வரவுக்காக காத்திருக்கும்

அதிபன் அகல்யா ......
                                                               யாரோ ஒருவன் 



யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
... ஒருவனாகிப்
             போவேன் நான்.............

anto 

  எதிர்பார்ப்பு 


நீ வரும் பகலை எதிர் பார்த்து பார்த்து 
எத்தனை இரவுகள் என் 
விழிகள் தூங்காது 
கண்ணீர் வடிக்கின்றது 
தெரியுமா ???
... வாழ்வு விடியும் நாளுக்காய்
காத்திருக்கவில்லை என் நாட்கள்
வாழ்வு முடியும் நாளுக்காகவே
காத்திருக்கின்றன ........
நாம் நடக்கும் போது
கூடவே வரும் மேகமாய்
நான் எங்கு சென்றாலும்
என்னுடனே நினைவாய்
வந்திடும் ஒரு நொடிப்பொழுதில்
நீ எனக்கு தொலை பேசியில்
அழைத்து உன்னில் என்னை
தொலைத்த நிமிடங்கள் ..........
ஒரு பார்வை
ஒரு ஸ்பரிஷம்
ஒரு கண்ணீர்
ஒரு புன்னகை
ஒரு முத்தம்
ஒரு ஜனனம்
ஒரு மரணம்
இத்தனையும் உன்னை
காணும் அந்த நொடியில்
நிகழ்ந்தால் போதும்
என் இந்த ஜென்மத்துக்கு ....



வருவாய் என .............
மழை 


நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!
*
அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!
*
மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!
*
நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!
*
சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!
*
மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!
*
மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!
*
ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!
*
இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!
*
என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!
*
மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!
*
சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!
*
நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!
*
நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!
*
முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!
*
குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!
*
மின்னல்
மழையின் கிறுக்கலென்றால்
உன் விரல்
என்மேல் வரைந்ததை
என்னென்பது?!
*
மழை
மழையை மட்டும் குறிக்காது
காதலையும்!
*
நீ பெண்ணாகவும்
நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம்
துலங்கியது
ஓர் மழையிரவில்!
*
நீ
பெண்ணின் ஓர்துளி
நான்
ஆணின் ஓர்துளி
வா,
காதல் பொழிவோம்!
*
என் வேர்கள்
காத்திருக்கின்றன
உன்
மழைக்காக!
*
மழை
வானின் ஓர்துளி
நீ
அழகின் ஓர்துளி...................................


என்னவளே 


   என்னுடைய முதல் நாள் பள்ளி வாழ்க்கை 

                 

 நான் பள்ளியில் சேர்ந்தது 01-06-1998 திங்கள் கிழமை
என் பெயர் ஆ. அந்தோணி அதிபன் ராஜ்
எனது பள்ளியின் பெயர் R.C. தொடக்க பள்ளி
என் முதலாம் வகுப்பு ஆசிரியரின் பெயர் விக்டோரியா
எங்கள் சத்துணவு ஆசிரியர் பெயர் சூசை
எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் பெயர் ஜான் பால் பிரான்சிஸ்



அடிக்கடி அவிழ்ந்து விழும் கால்சட்டை...! 
இழுத்து பிடித்துகொள்ளும் பீச்சாங்கை..! 
தோளில் சுமந்த நரம்பு பை ..!
அம்மா வைத்து விட்ட திருநீறு..! 
அழுத்தி வாரப்பட்ட தலை 
சிவந்துப்போன கண்கள் ...! 
வழியும் கண்ணீர்...! 
இதழ்களை சுவைக்கும் சலிநீர்...! 
படபடக்கும் நெஞ்சு...! 
வெட்டுப்பட்ட மண்புழுவாய் துடிக்கும் மனது...! 
திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே 
போக மனம் இல்லாமல் முதல் நாள் பள்ளி போகும் நான் ..!

01-06-1998 திங்கள் கிழமை

அதிபன் அகல்யா 



 என்னுடைய நிறைவேறா ஆசைகள் 



                                 


உன் கை பிடித்து கடலோரம் நடக்கவும் 
உன் மடிமீது தலை சாய்த்து தூங்கவும்
என் கவிதைகளை படித்து நாம் இருவரும் இரசிக்கவும்
நீ என் மர்பில் சாய நான் உன் தலை கோதவும்
உன் காதோரம் முடி விலக்கி முத்தமிடவும்
நீ என் காதை கடிக்கவும்
என் கவிதைகள் உள் காதில் சொல்லவும்
உன் அழகை சொன்ன என் கவிதை கேட்டு நீ நாண
உன் வெட்கத்தை அள்ளிப்பருகவும்
நீ என் தோளில் சாய்ந்து கொள்ள
உன் முதுகில் விரல்களால் கோலம் போடவும்
உன் மார்பின் சூட்டில் நான் துயில் கொள்ளவும்
உன் கண் பேசும் கவிதைகள் வாசித்து காதில் பதில் சொல்லவும்
உன் உறங்காத ஏக்கங்களை தாலாட்டு பாடி தூங்க வைக்கவும்
உன் தலையணையை நான் எடுத்துவிட்டு
என் மடியையே தலையணையாக்கி தரவும்
உனை என் மடிமீது போட்டுக்கொண்டு
ஒரு குழந்தை போல் உன் கன்னம் கிள்ளவும்
உன் பாதம் எடுத்து என் மடி மீது வைத்து
உன் காலில் கொலுசு மாட்டி அழகு பார்க்கவும்
நீ ஜன்னல் வழியே அழகை இரசிக்க
நான் பின்னால் வந்து இடுப்போடு சேர்த்து
அணைத்துக்கொள்ளவும்
நீ சரிந்து படுக்கும் போது உன் மெல்லிடை மேல்
என் விரல்களால் நடந்து போகவும்
நான் இரு கையாலும் உன் முகம் பிடித்து
உன் கண் மயங்கிய முக வெட்கத்தை இரசிக்கவும்
என் கையை எடுத்து உன் கையில் வைத்து
நான் உனக்கானவன் என்று சத்தியம் செய்யவும்
நீ எனக்கு எப்போதும் என்னருகில் வேணும்மடி செல்லம் ...!

அழகான ராட்சஷி...............


                                     என்னவளின் குறுஞ்செய்தி (Msg)

             



தூங்கும் முன்பும்
தூக்கத்தின் நடுவிலும்
எழுந்ததும்
குளித்ததும்
சாப்பிட்டதும்
அலுவலகம் செல்லும் முன்பும்
செல்லும் வழியிலும்
சென்ற பின்னும்
வேலையினிடையேயும்
அலைபேசியை எடுத்துப்
பார்ப்பது வழக்கம்
உன் குறுஞ்செய்திக்கும்
அழைப்பிற்கும்
ஏங்கித் தவிக்குமென்
மனதிற்கு ஒரே ஆறுதல்
இன்னும் பத்திரப்படுத்தியிருக்கும்
ஆறு மாதத்திற்கு முன்
உன்னால் அனுப்பப்பட்ட
‘Good Night"
எனும் குறுஞ்செய்தி....

தந்தை ( அப்பா)





கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து கேட்காமலே நிறைய சேர்த்து வைத்து
கேள்வியை மட்டும்
தன் சொத்தாய் நினைத்து
வாழும் எம் தந்தையே..!
உன்னை விட சான்றோர்
பெரியோர் ஆயிரம் இருந்தாலும்
சத்தியமாய் வாழ்வதை
உன்னிடமே கற்றேன் இதில்
இல்லை விந்தையே
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை !
எந்த மகனும்
பெரிது படுத்துவது இல்லை
தந்தையின் சொல்லை
என்ன தூக்கி வளர்த்த அப்பா
என் சந்தோசத்த
சுகமான சுமையா கொண்ட அப்பா
நான் படிக்காத பொழுது
கண்டித்து படிக்க சொன்ன அப்பா
உன் தன்மானம் தொடுமளவு
அவமானம் நான் தேடித்தந்த போதும்
அடுத்தமுறை செய்யகூடாதுனு
அடித்து, அணைத்து சொன்ன அப்பா
நான் பட்டம் வாங்கும் பொழுது
பெருமை பேசிய அப்பா
வயசு அம்பது ஆகியும்
வயசு பையனுக்காக உழைக்கும்
அப்பா
வேலை கிடைக்காத போது
வெளிறிப்போனது மனமாயினும்
வெற்றி கிட்டும் என
நம்பிக்கை தந்த அப்பா
வேலை கிடைத்த போது
விவசாயி கண்ட மழையாய்
இன்பம் கொண்ட அப்பா
என் இன்பத்தை உங்கள்
எண்ணமாய் கொண்டு
எனக்காய் பல
இன்னல்கள் கண்டு - என்
சிரிப்பில் உங்கள் வெற்றியை
காணத்துடிக்கும் அப்பா
என் தாய்க்கோ நான் ஒரு பிள்ளை
அவளையும் சேர்த்து தந்தையே
உனக்கு இரு பிள்ளை
இது அன்புள்ள என் அப்பாவுக்காக ......    அதிபன் ராஜ் ஆரோக்கிய தாஸ் 

Saturday 15 August 2015

                                   

                                                      அழகான ராட்சஷி          10-02-2015 to 10-07-2015
* உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய் 
இருந்து, நீ என் உணர்வில்
கலந்தவளானாய்...
* இன்று,
பேச வார்த்தைகளற்று,
விழி முழுங்கும்
மோகப் பார்வைகளற்று,
கொண்டு குலாவி
மகிழ்ந்த இடங்களின்
சுவடுகள் அற்று,
தனிமையில்...
கண்ணியம் காக்கிறது
நம் காதல்....
* உன் கொஞ்சல்கள் நிறைந்த
பொழுதையும்,
என் கெஞ்சல்கள் நிறைத்த
நம் இரவையும்,
மென்று முழுங்கி
மௌனமாய் இருக்கிறது
நம் காதல்.....
* உன் சுவாசத்தின்
சூட்டிலே நான் கருக்கொண்ட
நேரத்தையும்,
உச்சி முகர்ந்து
அன்பாய் நீ தந்த
இச்சை முத்தத்தையும் ,
எனக்காய் நீ
உருமாறிய நேரத்தையும்,
கண்முன்னே காட்சியாக்கிக்
கொண்டிருக்கிறது,
நம் காதல்..
* நான் சொல்ல நினைத்த
சோகத்தையும்,
சேர்த்து வைத்த கண்ணீரையும்
கானல் ஆக்கி,
எனை உன்னிடம்
கரைசேர்த்தது
நம் காதல்...
* பணமென்றும், பகையென்றும்,
நட்பென்றும், நடிப்பென்றும்,
அன்பென்றும், ஆலகால விஷமென்றும்
பிறக்க முடியா பொருள்தனில்
உறவென்று வந்து,
என் வாழ்வில் பிரியாப் பொருள்
தந்த என் காதலே...
* முதுமை எனும்
இன்னொரு இளமை 
வரும்வரை
என்னைத் தொடரும் 
என் நிழலானவளே...( அழகான ராட்சஷி )
* இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?...

* ஆம் நீ இல்லா அறையில்,
எனைவாட்டும்
வெயிலும் குளிரும்
பெரிதாய்ப் படவில்லை..
நலம் விசாரிக்க
யாரும் மற்று
நானும், நம் காதலும்
தனிமையில்..கிடக்கையில்...


நீ மட்டும் புன்னகையில்

காத்திருக்கிறேன்  காலம் கடந்து வருவாய் என்று .................



           https://youtu.be/ASrqUe0ciwQ                                                            தீபாவளி

அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன் ஓசை நயம் கண்டு 
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்






அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர
தித்திக்கும் திருநாளாம்!
தீபாவளி ஒரு நாளாம்!
தீப்பொறிகள் விளையாடும்
திரும்பிய திசையெங்கும்.
வருடத்தில் ஒரு நாளாம்!
வசந்தத்தை தரும் நாளாம்!
வான வேடிக்கையை பார்த்து
வருத்தத்தை மறந்திடுவோம்.
ஒளிவீசும் திருநாளாம்!
ஒலி கேட்கும் ஒருநாளாம்!
ஓயாமல் வெடித்திடுவோம்-இவ்
ஒருநாளில் துன்பம் மறந்திடுவோம்.
புத்தாடை உடுத்திடுவோம்!
புன்னகையில் ஜொலித்திடுவோம்!
கவனத்துடன் வெடித்திடுவோம்
கலைப்பின்றி மகிழ்ந்திடுவோம்...
https://youtu.be/ASrqUe0ciwQ

Thursday 6 August 2015


பள்ளி பருவம் 
பசுமையான காலம் 
பள்ளிப்பருவம் ?

பாகுபாடில்லாத நட்பு

அர்த்தம் புரியா உறவுகள்

கவலை இல்லாத நாட்கள்

தேவை இல்லாத பணம்

காரணம் இல்லாத   சண்டை

கைகோர்க்க நண்பன்

கணம் இல்லா உள்ளம்

புன்னகைத்த முகம்

அன்பான தோழி

அழகான (காதலி) ராட்சஷி

நிம்மதியான நேரங்கள்
இவை எல்லாம் கடந்துவிட்ட நாட்கள் ?

வாழ்க்கை என்ன என்பதை அறியாத போது இருந்த பசுமை இன்று மறைந்துவிட்டது

ஆனாலும்
                                             முதல் காதலும்  ( 28/02/2015 to 10/07/2015 )

காதலியின் முத்தமும்     (28/02/2015)
சில நேரங்களில் � முத்துச்சிதறல்களாய் பசுமையான நினைவுகளை மீண்டும் தருகிறது




















Sunday 2 August 2015

happy friendship day wishes friends

தனிமையை நாமே எடுத்து கொண்டால்
                                                     அது இனிக்கும்

அதே பிறர் நமக்கு கொடுத்தால்
                                                   அது வலிக்கும் 


தொன் போஸ்கோ உயர்நிலைப்பள்ளி மாரனோடை  2003-2008
adhibanagalya.blogspot.com

சிறுவயதிலிருந்தே அதிகம் பாரட்டபடாதவர்களில் ஒருவனாய் இருந்திருக்கிறேன். பள்ளிக்கூடம் போக அடம்பிடித்து தான் சென்றிருக்கிறேன். ஆனால் எனக்கு பிடிக்காத பள்ளிக்கூடத்தையும் பிடிக்க வைத்தது நண்பர்கள் தான். வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த போது என்னோடு சேர்ந்து முட்டிபோட்ட நண்பன். வகுப்பறையில் நான் பேசினாலும் அனைவரது பெயரையும் எழுதி ஆசிரியரிடம் சொல்லும் போது என் பெயரை மட்டும் எழுதாமல் விட்ட தோழி! புளிய மரத்தில் புளியங்காய் அடித்து நண்பனின் மண்டையை நான் எரிந்த கல் உடைத்தபோதும் டேய்! எத்தனை காய்டா விழுந்துச்சு என கேட்ட நண்பன். கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட்டே தெரியாத என்னை நட்புக்காக சேர்த்த நண்பன்.
பள்ளியை முடித்து கல்லூரி சென்றாலும் என்னை பிரியாமல் என்னோடு நான் சேர்ந்த கல்லூரிக்கும் வந்த நண்பன். போரடிக்கும் வகுப்புகளில் கேண்டினை வகுப்பரையாக்கி வாழ்க்கையை புரிய வைத்தனர். நானெல்லாம் எதற்கும் லாயக்கில்லை! தினசரி கல்லூரி வந்து செல்லும், நண்பர்களை கலாய்க்க மட்டும் தெரிந்த மாணவனாக இருந்த என்னை..எங்களையெல்லாம் கலாய்க்குறல இதயே கல்ச்சுரல்ஸ் ஸ்டேஜ்ல செய்யுடா என உசுப்பேத்தி விட்ட கல்லூரி தோழி! காதலித்த பெண்கூட முதலில் தோழியாக தான் இருந்திருக்கிறாள். மச்சான் அவ உன்ன தாண்டா பாக்குறா என்று சொன்னபோது என அனைத்திலும் நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்!
அம்மா, அப்பா இல்லாமல் நான் இந்த உலகத்தில் இருந்திருக்க மாட்டேன். ஆனால் எனக்கான அடையாளத்தை படம் போட்டு காட்டியது நண்பர்கள் தான்! காதலில் தோற்ற நண்பனை தேற்றியபோது, சில நேரங்களில் யாரிடமும் கூற முடியாத அழுத்தமான விஷயங்களை மொட்டை மாடியில் நண்பனிடம் கண்ணீர் விட்டு அழுத தருணங்கள் இவர்களோடு தான்!
கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் எனக்காக பிரார்த்தனை செய்த நண்பர்கள், வேலை கிடைக்கவில்லை என்றதும் வாடா மச்சான் படத்துக்கு போகலாம் என்ற நண்பன், விடுடா இந்த கம்பெனி ஒரு மொக்க கம்பெனி என்ற தோழி! இவர்களுக்கு நன்றி சொன்னால் கிடைக்கும் அடிகள் ஆயிரம்!
உனக்கு இது தான்டா செட் ஆகும் என்று எனக்கு பிடித்த துறையை நோக்கி பயணிக்க வைத்தவன், வேலை பார்க்கும் இடத்தில் செமடா! சூப்பர்! என ஒவ்வொரு தருணத்திலும் என் வெற்றியை அவர்கள் வெற்றியாய் கொண்டாடியவர்கள்! முக்கியமாக டீக்கடைகளில் தேநீர் கோப்பைகளில் சியர்ஸ் அடிக்கும் நண்பன். எங்கு சென்றாலும் செல்ஃபிக்களில் பதிவாகும் புகைப்படத்தில் என்னை டேக் செய்யும் ஒருவன். பழைய நட்பை மறக்காமல் போக் செய்பவன். வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்பு தரும் தோழி என எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தொழில்நுட்பத்தால் அன்பு தொல்லை தருபவர்கள்! ஃபேஸ்புக்கில் என் ஃபேஸ் தெரிந்தாலே லைக் செய்பவர்கள். இப்படி பல கட்டங்களில் காரணமே இல்லாமல் என்னோடு பயணித்த இவர்கள் எல்லாரையும் என் நண்பர்கள் என்பதில் பெருமை கொள்ளும் நேரத்தில் இன்று யாரும் இவர்கள் யாரும் இல்லாத ஊரில் நண்பர்கள் தினம் கொண்டாட போகிறேன் என்று நினைத்தால் வருத்தமாக தான் இருக்கும். ஆனால் நான் வருந்துவதாய் இல்லை. எங்கு இருந்தாலும் ஒரு ஸ்டேட்டஸ், ஒரு எஸ்.எம்.எஸ் போதும் இவர்களது பயனங்களை ஒரே இடத்திற்கு திசை திருப்ப...நீங்கள் படித்து கொண்டிருக்கும் இதேவேளையில் இவர்களில் யாரவது ஒருவர் ஒரு கப் காஃபியோடு என்னோடு பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்..இந்த கடிதத்தின் முடிவில் ஒரு வாசகம் எழுதியிருந்தது '' என்றோ ஒருநாள் இறக்கலாம் என்ற எண்ணம் தோன்றினால் இவர்களில் ஒருவரது பெயர் ஞாபகம் வந்தாலும் முடிவை மாற்றிக்கொள்வேன் என்று!
இதனை படித்த எனக்கும் என் நண்பர்கள் ஞாபகம் நானும் ஒரு கோப்பை தேநீருக்காக பயணத்தை தொடங்கிவிட்டேன்...ஏதாவது ஒரு இணைப்பில் நீங்களும் என் நண்பரே...இனிய நண்பர்கள் தின வாழத்துக்கள்!!



இப்படிக்கு

என்றும் இனிய அன்புடன்

அதிபன் ராஜ்