கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 2 August 2015



தொன் போஸ்கோ உயர்நிலைப்பள்ளி மாரனோடை  2003-2008
adhibanagalya.blogspot.com

சிறுவயதிலிருந்தே அதிகம் பாரட்டபடாதவர்களில் ஒருவனாய் இருந்திருக்கிறேன். பள்ளிக்கூடம் போக அடம்பிடித்து தான் சென்றிருக்கிறேன். ஆனால் எனக்கு பிடிக்காத பள்ளிக்கூடத்தையும் பிடிக்க வைத்தது நண்பர்கள் தான். வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த போது என்னோடு சேர்ந்து முட்டிபோட்ட நண்பன். வகுப்பறையில் நான் பேசினாலும் அனைவரது பெயரையும் எழுதி ஆசிரியரிடம் சொல்லும் போது என் பெயரை மட்டும் எழுதாமல் விட்ட தோழி! புளிய மரத்தில் புளியங்காய் அடித்து நண்பனின் மண்டையை நான் எரிந்த கல் உடைத்தபோதும் டேய்! எத்தனை காய்டா விழுந்துச்சு என கேட்ட நண்பன். கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட்டே தெரியாத என்னை நட்புக்காக சேர்த்த நண்பன்.
பள்ளியை முடித்து கல்லூரி சென்றாலும் என்னை பிரியாமல் என்னோடு நான் சேர்ந்த கல்லூரிக்கும் வந்த நண்பன். போரடிக்கும் வகுப்புகளில் கேண்டினை வகுப்பரையாக்கி வாழ்க்கையை புரிய வைத்தனர். நானெல்லாம் எதற்கும் லாயக்கில்லை! தினசரி கல்லூரி வந்து செல்லும், நண்பர்களை கலாய்க்க மட்டும் தெரிந்த மாணவனாக இருந்த என்னை..எங்களையெல்லாம் கலாய்க்குறல இதயே கல்ச்சுரல்ஸ் ஸ்டேஜ்ல செய்யுடா என உசுப்பேத்தி விட்ட கல்லூரி தோழி! காதலித்த பெண்கூட முதலில் தோழியாக தான் இருந்திருக்கிறாள். மச்சான் அவ உன்ன தாண்டா பாக்குறா என்று சொன்னபோது என அனைத்திலும் நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்!
அம்மா, அப்பா இல்லாமல் நான் இந்த உலகத்தில் இருந்திருக்க மாட்டேன். ஆனால் எனக்கான அடையாளத்தை படம் போட்டு காட்டியது நண்பர்கள் தான்! காதலில் தோற்ற நண்பனை தேற்றியபோது, சில நேரங்களில் யாரிடமும் கூற முடியாத அழுத்தமான விஷயங்களை மொட்டை மாடியில் நண்பனிடம் கண்ணீர் விட்டு அழுத தருணங்கள் இவர்களோடு தான்!
கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் எனக்காக பிரார்த்தனை செய்த நண்பர்கள், வேலை கிடைக்கவில்லை என்றதும் வாடா மச்சான் படத்துக்கு போகலாம் என்ற நண்பன், விடுடா இந்த கம்பெனி ஒரு மொக்க கம்பெனி என்ற தோழி! இவர்களுக்கு நன்றி சொன்னால் கிடைக்கும் அடிகள் ஆயிரம்!
உனக்கு இது தான்டா செட் ஆகும் என்று எனக்கு பிடித்த துறையை நோக்கி பயணிக்க வைத்தவன், வேலை பார்க்கும் இடத்தில் செமடா! சூப்பர்! என ஒவ்வொரு தருணத்திலும் என் வெற்றியை அவர்கள் வெற்றியாய் கொண்டாடியவர்கள்! முக்கியமாக டீக்கடைகளில் தேநீர் கோப்பைகளில் சியர்ஸ் அடிக்கும் நண்பன். எங்கு சென்றாலும் செல்ஃபிக்களில் பதிவாகும் புகைப்படத்தில் என்னை டேக் செய்யும் ஒருவன். பழைய நட்பை மறக்காமல் போக் செய்பவன். வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்பு தரும் தோழி என எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தொழில்நுட்பத்தால் அன்பு தொல்லை தருபவர்கள்! ஃபேஸ்புக்கில் என் ஃபேஸ் தெரிந்தாலே லைக் செய்பவர்கள். இப்படி பல கட்டங்களில் காரணமே இல்லாமல் என்னோடு பயணித்த இவர்கள் எல்லாரையும் என் நண்பர்கள் என்பதில் பெருமை கொள்ளும் நேரத்தில் இன்று யாரும் இவர்கள் யாரும் இல்லாத ஊரில் நண்பர்கள் தினம் கொண்டாட போகிறேன் என்று நினைத்தால் வருத்தமாக தான் இருக்கும். ஆனால் நான் வருந்துவதாய் இல்லை. எங்கு இருந்தாலும் ஒரு ஸ்டேட்டஸ், ஒரு எஸ்.எம்.எஸ் போதும் இவர்களது பயனங்களை ஒரே இடத்திற்கு திசை திருப்ப...நீங்கள் படித்து கொண்டிருக்கும் இதேவேளையில் இவர்களில் யாரவது ஒருவர் ஒரு கப் காஃபியோடு என்னோடு பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்..இந்த கடிதத்தின் முடிவில் ஒரு வாசகம் எழுதியிருந்தது '' என்றோ ஒருநாள் இறக்கலாம் என்ற எண்ணம் தோன்றினால் இவர்களில் ஒருவரது பெயர் ஞாபகம் வந்தாலும் முடிவை மாற்றிக்கொள்வேன் என்று!
இதனை படித்த எனக்கும் என் நண்பர்கள் ஞாபகம் நானும் ஒரு கோப்பை தேநீருக்காக பயணத்தை தொடங்கிவிட்டேன்...ஏதாவது ஒரு இணைப்பில் நீங்களும் என் நண்பரே...இனிய நண்பர்கள் தின வாழத்துக்கள்!!



இப்படிக்கு

என்றும் இனிய அன்புடன்

அதிபன் ராஜ் 

No comments:

Post a Comment