கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015


பிரிவு 


நேற்று வரை என் அருகில் நீயிருக்க
தெரியவில்லை என் மனதிற்கு
துயரம் என்னவென்று?
இன்றோ நிலம் தொடும் என் கண்ணீர் துளியை
தாங்கவும் உன் கரமில்லை...!
ஆறுதல் அளிக்கவும் உன் தோளில்லை...!
அதை நினைத்தே இன்னும் ஏங்கும்
என் மனதிற்கு எப்படி கூறுவேன்...?
இது தவிர்க்க முடியாத பணி என்று.!
உண்மையில் இன்று தான் உணர்ந்தேன்.
வாழ்வில் இரண்டு முறை என் இதயம்
இருப்பதை நான் உணர்ந்தேன் ...
ஒன்று முதல் முதலாய் உன்னை கண்ட போது...!
மற்றொன்று நீ என்னை விட்டு விலகிய பிறகு....!
தொலைந்துபோன தூக்கம்...!
மூடமறந்த இமைகள்...!
சுவையே இல்லாத உணவு...!
நிறங்கள் அற்ற மலர்கள்...!
யாருடனும் பேசப்பிடிக்காத தனிமை...!
இசையே இல்லாத பாடல்கள்...!
மலர்களே இல்லாத பூங்காக்கள்...!
வானவில் இல்லாத மழைநாள்...!
மழைமேகம் கடந்து போகையில்...
தோகை விரித்து ஆடாத வண்ணமயில்...!
புன்னகை மறந்த முகங்கள்...!
உன்னைப் பிரிந்த பொழுதுகளில்
என்னை தொடரும் காட்சிகள் இவையே.
நீ மெல்லத் திரும்பும் ஒரு பொழுதில்
இவை எல்லாம் மெல்ல உயிர்பெறும்....
வருவேன் என்றொரு வார்த்தை சொல்.....
த்தனை ஆனந்தமும் மொத்தமாய்....
திரும்பி என் நினைவில் புன்னகைக்கும்...!!!
கண்ணீர் வடிக்கும் என் விழிகளுக்கு என்ன ஆறுதல் கூறுவேன்?
சாய்ந்து அழ உன் நெஞ்சம் இல்லையென்று
அலைபாயும் என் கரங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்?
உன் முகம் எனகெட்டாத தூரத்தில் இன்று
இருந்தும் இறந்து வாழ்கிறேன் ......
அதிசய பிறவியாய் உன்னை பிரிந்தும் இவ்வுலகத்தில்
கண்ணீர் துளிகளுடன் உன்வரவுக்காக காத்திருக்கும்

அதிபன் அகல்யா ......

No comments:

Post a Comment