கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 15 August 2015

                                   

                                                      அழகான ராட்சஷி          10-02-2015 to 10-07-2015
* உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய் 
இருந்து, நீ என் உணர்வில்
கலந்தவளானாய்...
* இன்று,
பேச வார்த்தைகளற்று,
விழி முழுங்கும்
மோகப் பார்வைகளற்று,
கொண்டு குலாவி
மகிழ்ந்த இடங்களின்
சுவடுகள் அற்று,
தனிமையில்...
கண்ணியம் காக்கிறது
நம் காதல்....
* உன் கொஞ்சல்கள் நிறைந்த
பொழுதையும்,
என் கெஞ்சல்கள் நிறைத்த
நம் இரவையும்,
மென்று முழுங்கி
மௌனமாய் இருக்கிறது
நம் காதல்.....
* உன் சுவாசத்தின்
சூட்டிலே நான் கருக்கொண்ட
நேரத்தையும்,
உச்சி முகர்ந்து
அன்பாய் நீ தந்த
இச்சை முத்தத்தையும் ,
எனக்காய் நீ
உருமாறிய நேரத்தையும்,
கண்முன்னே காட்சியாக்கிக்
கொண்டிருக்கிறது,
நம் காதல்..
* நான் சொல்ல நினைத்த
சோகத்தையும்,
சேர்த்து வைத்த கண்ணீரையும்
கானல் ஆக்கி,
எனை உன்னிடம்
கரைசேர்த்தது
நம் காதல்...
* பணமென்றும், பகையென்றும்,
நட்பென்றும், நடிப்பென்றும்,
அன்பென்றும், ஆலகால விஷமென்றும்
பிறக்க முடியா பொருள்தனில்
உறவென்று வந்து,
என் வாழ்வில் பிரியாப் பொருள்
தந்த என் காதலே...
* முதுமை எனும்
இன்னொரு இளமை 
வரும்வரை
என்னைத் தொடரும் 
என் நிழலானவளே...( அழகான ராட்சஷி )
* இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?...

* ஆம் நீ இல்லா அறையில்,
எனைவாட்டும்
வெயிலும் குளிரும்
பெரிதாய்ப் படவில்லை..
நலம் விசாரிக்க
யாரும் மற்று
நானும், நம் காதலும்
தனிமையில்..கிடக்கையில்...


நீ மட்டும் புன்னகையில்

காத்திருக்கிறேன்  காலம் கடந்து வருவாய் என்று .................



No comments:

Post a Comment