கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Wednesday, 19 August 2015

என்னை பிரிந்தவள்....
காணாமல் கண்ணீர் வடிக்கும்
என் கண்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
கலைந்த கனவு என்று,
அள்ளிப் பருக முடியாமல்
ஆர்பரிக்கும்
என் இதழ்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
கானல் நீர் என்று,
அணைக்கத் துடிக்கும்
என் கரங்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
அழகான வானம் என்று,
நினைத்து வாடும்
என் உள்ளத்துக்கு,
எப்படி புரிய வைப்பேன்..?
அவள்
உயரே பறந்து சென்ற
பறவை என்று,
புரிய வைக்க
புதிய வழிகள்
தேடுகிறேன்
புதிய காதல் கல்லூரியில்....
அனாதையாய் கிடக்கிறது
எனது அலை பேசி
என்னை போலவே
அவளது அழைப்பு இல்லாமல்......!
மறைக்கப் பார்த்தாலும்
மறையாத
உணர்வுகள்
காதலும்...
காமமும்....
மை இல்லாத
பேனா எழுதும்
எழுத்துகளைப் போல்,
உனக்கு தெரியாமல் போனதடி..
என் கவிதைகள்...

உன்னுள் ஒருவனாக......

No comments:

Post a Comment