கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015



ஒவ்வொருமுறை பார்க்கும்போதும்




ஒவ்வொருமுறை
உன் கண்களை 
நேருக்குநேர்
சந்திக்கநேரும்போதும்
அடுத்த நொடியில் மரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போல…
உன்னை
இமைக்காமல் பார்க்கின்றன
என் கண்கள்…!!!

நீ இமைதிறக்கும் நேரம்
என் பகலாகவும்…
இமைமூடும் நேரம்
இரவாகவும் கொள்கிறேன் நான்…
ஆனாலும் உந்தன் சில
கண்சிமிட்டல்களில்..
என் பல வருடங்கள் கடந்து
காணாமல் போகின்றன

நிறக்குருடன் கண்களுக்கு
நீலவானம் எப்படியோ
அப்படியே எனக்கும்
நீ இல்லா நினைவுகள்...!

காதல் வந்துவிட்டால்
தன்னிலை
மறைக்குமாம் -ஆம்
என் உமிழ் நீரின்
குமிழியில் கூட
உன் பிம்பம்தான்

இன்று வரை பார்க்கிறேன்,
இன்னும் புரியவில்லை ,
இவள் இதயம் எனக்காக
என்ன சொல்கிறதென்று

காதல்..
நெரிஞ்சிபூப்போல..
பூவாய் இருக்கும்போதே பறித்துவிடு..
இல்லையெனில்..
முள்ளாய் மாறி..
நெஞ்சில் குத்திவிடும்.................

வலிகள் சேர்ந்த வாழ்க்கையோடு
பயணம் செய்கிறேன்
மன்னிப்பாய என்னவளே ...

No comments:

Post a Comment