கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015


தந்தை ( அப்பா)





கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து கேட்காமலே நிறைய சேர்த்து வைத்து
கேள்வியை மட்டும்
தன் சொத்தாய் நினைத்து
வாழும் எம் தந்தையே..!
உன்னை விட சான்றோர்
பெரியோர் ஆயிரம் இருந்தாலும்
சத்தியமாய் வாழ்வதை
உன்னிடமே கற்றேன் இதில்
இல்லை விந்தையே
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை !
எந்த மகனும்
பெரிது படுத்துவது இல்லை
தந்தையின் சொல்லை
என்ன தூக்கி வளர்த்த அப்பா
என் சந்தோசத்த
சுகமான சுமையா கொண்ட அப்பா
நான் படிக்காத பொழுது
கண்டித்து படிக்க சொன்ன அப்பா
உன் தன்மானம் தொடுமளவு
அவமானம் நான் தேடித்தந்த போதும்
அடுத்தமுறை செய்யகூடாதுனு
அடித்து, அணைத்து சொன்ன அப்பா
நான் பட்டம் வாங்கும் பொழுது
பெருமை பேசிய அப்பா
வயசு அம்பது ஆகியும்
வயசு பையனுக்காக உழைக்கும்
அப்பா
வேலை கிடைக்காத போது
வெளிறிப்போனது மனமாயினும்
வெற்றி கிட்டும் என
நம்பிக்கை தந்த அப்பா
வேலை கிடைத்த போது
விவசாயி கண்ட மழையாய்
இன்பம் கொண்ட அப்பா
என் இன்பத்தை உங்கள்
எண்ணமாய் கொண்டு
எனக்காய் பல
இன்னல்கள் கண்டு - என்
சிரிப்பில் உங்கள் வெற்றியை
காணத்துடிக்கும் அப்பா
என் தாய்க்கோ நான் ஒரு பிள்ளை
அவளையும் சேர்த்து தந்தையே
உனக்கு இரு பிள்ளை
இது அன்புள்ள என் அப்பாவுக்காக ......    அதிபன் ராஜ் ஆரோக்கிய தாஸ் 

No comments:

Post a Comment